செங்கம்: அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா

61பார்த்தது
தமிழ்நாடு அரசு - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் செங்கம் தொகுதி, தண்டராம்பட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பொன் தனுசு, வேலு, மாவட்ட பிரதிநிதிகள் ஜோதி, வெங்கடேசன், புகழேந்தி, ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், முன்னாள்-இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி