திருவண்ணாமலை: நிலச்சரிவில் இருவரின் உடல் கண்டெடுப்பு

53பார்த்தது
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் உள்ள நகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன. இதில் ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதி, அவரது மகன், மகள் மற்றும் உறவினரின் மூன்று சிறுமிகள் என மொத்தம் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கினர். 

பேரிடர் மீட்புக்குழு நேற்றைய தினமே சம்பவ இடத்திற்கு சென்றாலும், இரவு நேரம் என்பதால் மீட்பு பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் தான் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி நடந்து வந்த நிலையில், இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியின்போது மண்ணை அகற்றும்போது பொக்லைன் இயந்திரத்தின் முன்பக்க பக்கெட்டில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டது. திருவண்ணாமலையில் 7 பேர் நிலச்சரிவில் சிக்கிய நிலையில் இருவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒன்று சிறுவனின் உடல் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி