புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தர்கள்

56பார்த்தது
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் புத்தாண்டில் அண்ணாமலையாரை வழிபட்டது மனதுக்கு நிறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி