தி.மலை: புதிய நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல்

68பார்த்தது
தி.மலை: புதிய நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல்
திருவண்ணாமலை மண்டலத்திற்கான அரசு போக்குவரத்து கழக பேருந்து மண்டலங்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 

மண்டல பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ். வளர்மதி, அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச்செயலாளர் துரைசாமி, நாகப்பட்டினம் மண்டல அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ். வளர்மதி, 

முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ். இராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான தூசி கே. மோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான ஜெயசுதா லட்சுமி காந்தன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் துரைசாமி, நாகப்பட்டினம் மண்டல அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி