திருவண்ணாமலை மகாதீபத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு 2,682,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இந்த மகாதீபம் 20 கி.மீ. தூரம் வரை தெரியும். பஞ்ச லோகத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த 6.5 அடி உயர கொப்பரையில் எரிகின்ற மகாதீபத்தை பார்ப்பதற்கு பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு குவிந்து வருகின்றனர். இன்று காலை முதலே திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பாஜக மாநில இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி அன்னதானம் வழங்கினார். உடன் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர். பாலசுப்ரமணியன், வடக்கு மாவட்ட தலைவர் சி.சி. ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.