தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்ததை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, அருணை கல்லூரியில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.