கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

தி. மலை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

தி. மலை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 182 பலதரப்பட்ட வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவு 14(4) ன் படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் தமிழ்நாடு அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வரும் 07. 11. 2024 ஆம் தேதி காலை 8. 00 மணிமுதல் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 01. 11. 2024 முதல் 06. 11. 2024-ம் தேதிவரை காலை 10. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை நுழைவு கட்டணமாக ரூ. 100/- செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்துகொள்ளலாம். மேலும், ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையையும், ஏலத்தொகையுடன் 18% சரக்கு மற்றும் சேவை வரியும் (GST) சேர்த்து உடனே செலுத்தவேண்டும். இதற்கு உண்டான இரசீது வழங்கப்படும் மற்றும் பதிவு எண், எஞ்சின் எண், சேசிஸ் எண், இல்லாத வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்திற்கு உண்டான இரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள துணை காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம் அவர்களது அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


திருவண்ணாமலை