கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

திருவண்ணாமலை பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குதல்

திருவண்ணாமலை பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், சொரகொளத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு 1 கூடுதல் வகுப்பறை கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவந்தார்.  அதன்பின் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
தி.,மலை: புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த மேயர்
Nov 09, 2024, 13:11 IST/செய்யாறு
செய்யாறு

தி.,மலை: புதிய கட்டிடங்களை ஆய்வு செய்த மேயர்

Nov 09, 2024, 13:11 IST
திருவண்ணாமலை தேரடி தெருவில் இப்போது பூ சந்தை இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் உள்ள இந்த சந்தைக்கு புதிய இடம் தோ்வு செய்யப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை, காந்தி நகா் நெடுஞ்சாலைப் பகுதியில் ரூ. 30 கோடி மதிப்பில் காய்கறி, பூ சந்தை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை திருவண்ணாமலை மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜன், திருவண்ணாமலை நகர திமுக செயலா் பா. காா்த்திவேல்மாறன், நகா்மன்ற உறுப்பினா் காயத்ரி கிருஷ்ணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.