அரசு பேருந்தில் பெண்ணுக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை

66பார்த்தது
அரசு பேருந்தில் பெண்ணுக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை
அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் டிக்கெட் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் பயணித்த பெண் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளார். அவருக்கு டிக்கெட் பரிசோதகர் ரூ.200 அபராதம் விதித்துள்ளார். இந்த செய்தி பூதாகரமான நிலையில் அந்தப் பெண்ணுக்கு தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும், டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.