ஆரணி: குன்னத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கவுன்சிலர் பகுத்தறிவு துரைமாமது கலந்து கொண்டார். ஊராட்சி செயலாளர் வேலு உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.