திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி சேவூர் ஊராட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆறு வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேவூர் மற்றும் SV நகரம் பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
உடன் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.