தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “நவ.25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். நாளுக்கு நாள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. ஆசியருக்கு கால் பிடித்துவிடுவது, டாய்லெட் சுத்தம் செய்ய வைப்பது உள்ளிட்ட வேலைகளை பள்ளி குழந்தைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.