ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மண்டல துணை தாசில்தார் தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா, தலைமை ஆசிரியர் கேசவன், பிடிஓ உதவியாளர் கோபி மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன் னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு ஆர் டிஓ பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பொதுமக் களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று விசாரணை நடத்தினார். இக் கூட்டத்தில் மக்கள் சமூக பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜன் அளித்த மனுவில்,
ஆரணி டவுன் பழைய, புதிய பஸ் நிலையம், காந்தி சாலை, அண்ணா சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில்டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால், சாலையை கடந்து செல்ல மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆரணி டவுனில் உரிய அனுமதியின்றி இடையூறாக வைத்துள்ள பேனர்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர். கோரிக்கை மனுக்களை பெற்ற ஆர்டிஓ பாலசுப்பிரமணியன், அவற்றை துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.