திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே நந்தகுமார் என்பவர் மகாராஜா பிரியாணி என்று புதியதாக பிரியாணி கடையை திறந்துள்ளார். இந்த கடை திறப்பு நாளான இன்று(அக். , 4) 100 ரூபாய் பிரியாணி 10 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படும் என்று ஆரணி நகர் முழுவதும் நேற்று வால்போஸ்டர் ஒட்டப்பட்டது. பின்னர் பொதுமக்கள் 10 ரூபாய் பிரியாணி வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு சென்றதால் கடை உரிமையாளர் அனைவருக்கும் டோக்கன் வழங்கி வரிசையில் நிற்க வைத்து அனைவருக்கும் பிரியாணி வழங்கினர். பொதுமக்கள் புரட்டாசி மாதம் என்று கூட பாராமல் வரிசையில் நின்று 10 ரூபாய் பிரியாணியை வாங்கிக் கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.