திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு மத்திய அரசு வழங்கும் தினக்கூலியான ரூ. 320ஐ முழுமையாக வழங்காமல், குறைத்து வழங்கி வருவதால் , அதிருப்தியடைந்த கொளத்தூா் ஊராட்சி ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் தாங்கள் கொண்டு சென்ற தளவாடப் பொருள்களான கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றை வேலூா் - படவேடு நெடுஞ்சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய கூலித்தொகையை பெற்றுத் தருவதாகக் கூறினாா்.