திருப்பதி லட்டு வீடியோ நீக்கம்: வருத்தம் தெரிவித்த ’பரிதாபங்கள்’ சேனல்

80பார்த்தது
திருப்பதி லட்டு வீடியோ நீக்கம்: வருத்தம் தெரிவித்த ’பரிதாபங்கள்’ சேனல்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை கிளப்பியது. இந்நிலையில் 'லட்டு பாவங்கள்' என்ற வீடியோவை தங்களுடைய வழக்கமான காமெடி பாணியில் நையாண்டி செய்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்டது. வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளை பெற்றது. இதனிடையில் குறித்த வீடியோவை நீக்கியுள்ள பரிதாபங்கள் குழுவினர் அது தொடர்பாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி