தாராபுரம்: புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு பணி தொடங்குவதற்கான இடம் ஆய்வு
தாராபுரம் நகராட்சியில் பொது மக்களிடம் நீண்ட நாள் கோரிக்கை ஆன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு பணியை தொடங்குவதற்கான இடத்தை பார்வையிட்டு மண்டல இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சுகந்தி, நகர மன்ற உறுப்பினர்கள் சக்திவேல், செலின் பிலோமினா ஜான்பால், புனிதா சக்திவேல், முத்துலட்சுமி பழனிச்சாமி, தேவி அபிராமி கார்த்தி, சாந்தி இளங்கோ, சஜிதா பானு, அகமத் பாஷா, ராசாத்தி பாண்டியன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.