கவுண்டச்சிபுதூரில் ரூ. 24 லட்சம் செலவில் திட்டப் பணிகள்

74பார்த்தது
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் 15வது நிதி குழு மானியத்தில் ரூ. 23 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜைக்கு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவரும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட மகளிர் அணி தலைவருமான செல்வி ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் துணைத் தலைவர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். அதன்படி ராம் நகர் பகுதியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்து 80 வீடுகளுக்கும், காந்திநகர் பகுதியில் 40 வீடுகளுக்கும் சித்தாக்காடு பகுதியில் 28 பேருக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கும் மெட்ரோ சிட்டி, பெஸ்ட் நகர், கவுண்டச்சிபுதூரில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் ஆன தனியரசு மற்றும் சொர்க்கம் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் நர்மதா ஈஸ்வரன், சரஸ்வதி தங்கவேல், புனிதா கார்த்திகை செல்வன், பாலசுப்பிரமணியம் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மேற்கு ஒன்றிய தலைவர் கௌதம், துணைத் தலைவர் தமிழரசு, பெஸ்ட் நகர் சேகர், குணசேகர், விஷ்ணு, கார்த்தி, தொண்டர் அணி தலைவர் சரண், மகளிர் அணி மேற்கு ஒன்றிய தலைவர் ரஞ்சிதா உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊராட்சி செயலாளர் நாகராஜ் செய்திருந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி