தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் நீர்த்தேக்க ஓடை அணையில் கடந்த 20, நாட்களாக வண்டல் மண் என்ற பெயரில் அனுமதி வாங்கிவிட்டு தினம்தோறும் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கிராவல் மண்ணை கொள்ளையடித்து. தாராபுரம், மூலனூர், கீரனூர், மானூர், திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு கிராவல் மண் கொண்டு சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர்.
ஆனால் அதற்கு சிறிதும் அஞ்சாத கிராவல் மண் மாஃபியாகளின் அடியாட்கள் உருட்டுக்கட்டையுடன் பொதுமக்களை மிரட்டினர் .
அப்போது தாராபுரம் காவல் துறையினர் பொது மக்களை மிரட்ட வந்த அடியாட்கள் மீது எந்த சட்ட. நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கிராவல் மண் திருட்டை தடுக்க கோரி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் இருக்க வந்தனர் அப்போது
வட்டாட்சியர், திரவியம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் விவசாயிகளிடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு தாராபுரம் வட்டாட்சியர் திரவியம் நல்லதங்காள் அணைக்கு விவசாயிகளை அழைத்துக் கொண்டு ஆய்வுக்கு சென்றார்.