தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே தனியார்க்கு சொந்தமான கேஸ் பங்க் உள்ளது. இந்த கேஸ் பங்கின் அருகே சிறுத்தை ஒன்று இருப்பதை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் வயது 40 என்பவர் பார்த்தார். அங்கிருந்து சிறுத்தை அருகில் உள்ள பகுதிக்கு சென்றதைப் பார்த்த சிவகுமார் உடனடியாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தலைமை காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பிறகு காங்கேயம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் தனியார் கேஸ் பங்கின் அருகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா என்பதையும் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த சிவக்குமாரை அழைத்து அடையாளங்களை கேட்டறிந்தனர். மேலும் இந்தப் பகுதியின் அருகே
ரங்கம் பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம் பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளது. மேலும் வன காவலர்கள் சிறுத்தையின் கால் தடம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.