
தாராபுரத்தில் மழை நீர் வடிதல் பராமரிப்பு பணி
தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 26 மற்றும் 27-வது வார்டு பகுதிகளில் நகராட்சி பொது நிதியிலிருந்து சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகளை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் நடந்தது. இதில் நகராட்சி பொறியாளர் சுகந்தி, உதவி பொறியாளர் ராஜேஷ், கவுன்சிலர்கள் ஷாலினி பவர் சேகர், தனலட்சுமி அய்யப்பன், மலர்விழி கணேசன், நகர அவைத் தலைவர் கதிரவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.