திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே வீட்டு வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து அதிமுக நகர செயலாளர் சி. ஆர். ராஜேந்திரன் தலைமையில். ஒன்றிய செயலாளர் சென்னை பாலு முன்னிலையில்
மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம் நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட 600 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு திமுக ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தாராபுரம் நகரம், தாராபுரம் ஒன்றியம், சேர்ந்த பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதே போல கொளத்துப்பாளையம் பேரூராட்சி, சின்னக்காபாளையம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிமுகவினர் கைகோர்த்து சாரையாக நின்று திமுகவுக்கு எதிராக 41 கால மாத ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.