மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  முப்பெரும் விழா

77பார்த்தது
திருப்பூர் தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தாராபுரம் தமிழ் கலை மன்றத்தில் மாவட்டச் செயலாளர் ராயல் ராஜா தலைமையில் முப்பெரும் விழா ஆலோசனை பொதுக்கூட்டம்  நடைப்பெற்றது. இதில். மாநில செயலாளர் ஜாபர் சாதிக் நகர அவைத் தலைவர்  பைசல், நகர செயலாளர் யாசின். ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மஜகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது தாராபுரம் தொகுதி மக்களுக்கு மஜக சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்க இருப்பது. பழனி பாபாவின் கொள்கையை முன்னெடுத்து செல்வது அனைத்து சமுதாயத்தினருக்கும் மஜகவில் முன்னுரிமை கொடுப்பது. மேலும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது. பொதுமக்களின் பொதுவான பிரச்சினைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநில சமூக நீதிப் பாசறை பணித்தலைவர் நெல்லை ரமேஷ் தேவர், மாநில மனித உரிமை செயலாளர் கண்ணன். ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்வில் சமூக நல்லிணக்க உறுதிமொழியை தலைவர் வாசிக்க, மக்கள் எழுந்து நின்று அதை வழி மொழிந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மஜகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி