தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் செய்ய பொறியாளர் கோபால்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள இருப்பதாவது: -
குண்டடம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூரியநல்லூர், ராசிபளையம், சங்கரன்டா பாளையம், மரவாபாளையம், காதப்புள்ளபட்டி, புதுப்பாளையம், குள்ள காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல் பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கி பாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம், எம். ஜி பாளையம், மேட்டுக்கடை மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.