ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

77பார்த்தது
ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பக்கத்தில், "தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து 'திராவிடநல் திருநாடு' எனும் வரியை நீக்கியுள்ளனர். யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் 'திராவிடம்' வீழாது. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் ஆளுநரை, ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி