தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ஜி கே வாசன் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்து உரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என்றாலும் ஆட்சியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது என தெரிவித்தார் மேலும் தற்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எனவும் தவறு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் அவர் விடுதலை செய்யப்படவில்லை என தெரிவித்தார் மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்குவது மற்ற யாரையெல்லாம் அமைச்சராக்கலாம் என்பதெல்லாம் அவர்களுடைய உரிமை எனவும் தெரிவித்தார் மேலும் விசிக மதுவிலக்கு மாநாடு அர்த்தத்தை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் மாநாடு நடத்தும் கட்சி ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ளது மதுபான கடையை மூடும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார் திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.