மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி அதிமுக கட்சி சார்பில் நேற்று(செப்.24) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வந்தால் அண்ணாவின் ஆன்மா தண்டிக்கும் என முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவருமான ஆர். பி. உதயகுமார் பேசியுள்ளார்.