திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் முகாம் அலுவலகத்திற்கு. தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக சென்னை மதுரை கோவை திருப்பூர் திருச்சி திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களில் இருந்து அரசு ஊர்தி ஓட்டுநர்கள் 70பேர் மாநில தலைவர்
பா. பச்சையப்பன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் மு. தனபாலன், மாநில பொருளார் பை. முருகன் திருப்பூர் மாவட்ட செயலாளர் தம்புராஜ் ஆகியோர் முன்னிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் கயல்விழி செல்வராஜ்க்கு சால்வை அணிவித்து அவர்களது கோரிக்கை மனுவினை கொடுத்தனர். இதில் ஆண்-பெண் ஓட்டுநர்கள். இருபாலரும் கலந்து கொண்டனர்.
அரசு ஊர்தி ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தலைமை செயலகத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு மட்டும் பதவி உயர்வு (உதவியாளர் Assistant) ஆக பதவி பணி மாறுதலுக்கான அரசாணை உள்ளது. அதில் அவர்கள் பயன் அடைந்து கொண்டும் இருக்கின்றனர்.
தலைமை செயலகத்தில் உள்ள ஓட்டுநர்களுக்கு பதவி (பணி) மாறுதல் நிலைபோல மாவட்ட அரசுதுறை ஊர்தி ஓட்டுநர்களுக்கும், கல்வி தகுதியின் அடிப்படையில் குறைந்தது ஏதேனும் % (சதவீதம்) விழுக்காடுகளாவது வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல்வி தகுதியின் அடிப்படையில் பணி (பதவி) மாறுதல் நிலையை வழங்குமாறு கேட்டுகொண்டனர்.