பிரபல பெங்காலி நடிகர் தேப்ராஜ் ராய் (69) காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு உயிரிழந்தார். சத்யஜித் ரே இயக்கிய பிரதித்வந்தி (1970) திரைப்படத்தில் அறிமுகமான தேப்ராஜ், பல படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். தேப்ராஜ் ராயின் மறைவுக்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.