தாராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதன் காரணமாக நாளை வியாழக்கிழமை இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலான தாராபுரம் நகர் பகுதிகள் தாராபுரம் புறநகர் வீராட்சி மங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், வண்ணப்பட்டி, மடத்துப்பாளையம், உப்பார் டேம், அம்மாபட்டி, பஞ்சப்பட்டி, சின்னக்கம்பாளையம், சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், உ. அலம்பாளையம், கொண்டரசம்பாளையம், குள்ள காளிபாளையம், அலங்கியம், குள்ளப்பாளையம், மதுக்கம்பாளையம், கண்ணாங்கோயில் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.