10 கோடியில் புதிய திட்டங்கள் -அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்

64பார்த்தது
தாராபுரம் அருகே புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கன்னிவாடி பேரூராட்சி, மணலூரில் மூலதன மான்ய திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சாலை சீரமைக்கும் பணி ஆழ்துளைக்கிணறு அமைத்து மின் மோட்டர் பொருத்தி குடிநீர் விநியோகம் பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  ஆகியோர் துவக்கி வைத்தனர். மூலனூர் ஊராட்சி ஒன்றியம், புஞ்சைத்தலையூர் ஊராட்சி, காத்தசாமிபாளையத்தில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் 60, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும், கருப்பன்வலசு ஊராட்சி, பட்டத்திபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம், 15-வது மாநில நிதிக்குழு திட்டம், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள், மற்றும்  மூலனூர் ஊராட்சி ஒன்றியம், வேளாண்பூண்டி ஊராட்சி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக்கடை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி