தாராபுரத்தில் தானாக ஓடிய கார் காரை துரத்திய உரிமையாளர்.

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
நபர் ஓருவர் சாலையில் தானாக ஓடிய காரை துரத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அருகே உள்ள ரஞ்சிதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் குமார் இவர் நேற்று இரவு தனது கியா காரில் தாராபுரத்தில் இருந்து உடுமலை சாலை வழியாக தனது சொந்த ஊரான ரஞ்சிதாபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியில் வந்த லாரி ஒன்று இவரை ஒட்டியவாறு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த நவீன் குமார் காரை ஆப் செய்யாமல் சாலையில் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து கீழே இறங்கி லாரி ஓட்டுனரை சத்தமிட்டார். அதற்குள் இவர் ஓட்டி வந்த ஆட்டோமேட்டிக் கார் தானாக ஓடத் தொடங்கியது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நவீன் குமார் காரை துரத்திக் கொண்டே ஓடினார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கம்பத்தில் மோதி சாக்கடையில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால் எந்தவித காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. மேலும் கார் வேகமாக மோதியதால் காரில் இருந்த சேஃப்டி பலூன் ஓப்பனானது. அதன் பிறகு காரை சாக்கடையில் இருந்து நவீன் குமாரால் எடுக்க முடியவில்லை. பின்பு ரெக்கவரி வாகனத்தை வரவைத்து அதன் மூலம் சங்கிலியால் கட்டி சாக்கடையில் கிடந்த காரை எடுத்தனர். இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி