திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதி ஆற்றில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கவுண்டையன்வலசு கிராமம் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ. 11. 12 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை மற்றும் மாம்பாடி-புங்கந்துறை கிராமம் அமராவதி ஆற்றில் ரூ. 11. 56 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை ஆகிய தடுப்பணைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்த பிறகு தடுப்பனையில் மலர் தூவி தண்ணீரை. பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டார். இதில்
தாராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ். வி. செந்தில் குமார், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன், செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் சக்திகுமார், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்வின்போது ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.