திருப்பூர்: விஷம் குடித்து பெண் தற்கொலை

72பார்த்தது
திருப்பூர்: விஷம் குடித்து பெண் தற்கொலை
தாராபுரத்தை அடுத்த சின்னியகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). தாராபுரம் நெடுஞ்சாலைத்துறையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பேபி (38). இவர்கள் புதிதாக கறவை பசுமாடு ஒன்று வாங்கினார்கள். அந்த மாட்டில் பலமுறை முயற்சித்தும் பால் கறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மாட்டை அடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பேபி ஏன் மாட்டை அடிக்கிறீர்கள்? வாங்கி வந்து புதிய இடமாக இருப்பதால் அது பால் கொடுக்க மறுக்கிறது? சிறிது நாள் ஆனால் தானாக பழகிவிடும் என கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் மனம் உடைந்த பேபி விவசாய தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி