திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் இருந்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஏழாவது ஒன்றிய கிளை மாநாடு பேரணி துவங்கப்பட்டது. பேரணியில் தேர்தல் வாக்குறுதியான காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் 9000 வழங்க வேண்டும், பணிக்கொடை 3 லட்சம் முதல் 5 லட்சம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய தலைவர் எலிசபெத், ஒன்றிய துணைத் தலைவர் இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.