வருவாய் கிராம ஊழியர்கள் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம்

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. வருவாய் கிராம ஊழியர் சங்கத் தலைவர் குப்புராஜ் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தில் ஓய்வுபெற்றோர் மற்றும் இறந்தவர்களுக்கு பிடித்தம் செய்த பண பலன்களை வழங்க வேண்டும். வருவாய் உதவியாளர்களை மாற்று வேலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி