தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்

57பார்த்தது
அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.4,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுதான் முன்னேறிய முதன்மை மாநிலமாக விளங்குவதாக சொல்லப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை மட்டும் உயர்த்திக் கொடுக்காமல் மாற்றுத்திறனாளிகளை போராட்டத்திற்குத் தள்ளுவது ஏற்கத்தக்கதல்ல. 

உதவித்தொகை பெற்றுக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு திடீரென 2, 3 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது - கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை - சட்டப்படி 4 மணி நேர வேலைக்கு பதிலாக 6 முதல் 8 மணி நேரம் வரை வேலை வாங்கப்படுகிறது. வேலை செய்த நாட்களுக்கான கூலி மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

 உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்த வேண்டும். 100-நாள் வேலையை வழங்க வேண்டும். சட்டப்படி 4 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சிறைநிரப்பும் போராட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து அண்ணா சிலை அருகே இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 2 வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் சிறைவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி