சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 11-ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம், விபத்துகளை குறைக்க எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் வட்டச் சட்டப் பணிகள் குழு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஊர்க்காவல் படையினர், காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.