திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று கண் மற்றும் காது பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை காவல்துறை, அரவிந்த் கண் ஆஸ்பத்திரி உள்ளிட்ட தனியார் அமைப்புகள் இணைந்து நடத்தியது. முகாமிற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
அதைத் தொடர்ந்து உடுமலை உட்கோட்ட போலீசார் மற்றும் டிரைவர்களுக்கு கண், காது பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனை, வழிகாட்டுதல் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கண் டாக்டர் மதுமிதா, போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட போலீசார் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.