அவிநாசி - Avanashi

அவினாசி: தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

அவினாசி: தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

திருப்பத்தூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 48). கட்டிடத் தொழிலாளியான இவர் அவினாசியை அடுத்த பழங்கரை ஊராட்சி நல்லிக்கவுண்டம்பாளையத்தில் தங்கி அங்குள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார்.  நேற்று (பிப்ரவரி 19) கட்டிடத்தின் மேல் நின்று வேலை பார்த்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా