திருப்பூர்: காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கைகலப்பால் பரபரப்பு

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அவிநாசி வட்டார, நகர மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது. 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கோபிநாத் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு அவிநாசி நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு முறையாக தகவல் தராமலும், நகரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதும் குறித்து முன்னாள் நகர பொறுப்பாளர் பொன்னுகுட்டி, ஊடக பிரிவு மாநில பொதுச் செயலாளர் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும் போது வந்து திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோபிநாத் பழனியப்பனிடம் கேள்வி கேட்டனர். 

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை தொண்டர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு ஆத்திரமடைந்த கோபிநாத் பழனியப்பன் மேடையிலிருந்து வேகமாக கீழே வந்து செல்போனை தட்டி விட்டார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கோபிநாத் பழனியப்பன் மேடையிலிருந்து மண்டபத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ காட்சிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.

தொடர்புடைய செய்தி