சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சி பஞ்சலிங்கம்பாளையம் கிராமத்தில் சின்னசாமி என்பவரின் கரும்புளி தோட் டத்துப்பகுதியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே சின்னசாமி யின் மனைவி கலைவாணி சென்று பார்த்ததில் 6 மாதம் ஆன பெண் மான் குட்டி ஒன்று புதருக்குள் சிக்கி தவித்தது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மான் காவலர் வெங்கடேசன், அப்பகுதிக்கு சென்று மான் குட்டியை மீட்டார். அதன்பின் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் மான் குட்டியை விடுவிக்க எடுத்து சென்றார்.
அப்போது, குட்டியை பறி கொடுத்த தாய்மான் அங்குள்ள தோட்டத்து பகுதிக்கு வந்து வெகு நேரம் நின்றது. இதைய டுத்து மான் குட்டியை, தாய்மானுடன் சேர்க்கப்பட்டது. அடுத்த நொடியே குட்டியை பத்திரமாக தாய் மான் அரவ ணைத்து கூட்டிச் சென்றது.