நான் சிபிஎஸ்இ பள்ளி நடத்தவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமா, எங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. இன்னும் அந்த பள்ளி செயல்படவே இல்லை. ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக, ஊடக விமர்சனத்திற்காக அண்ணாமலை பேசி வருகிறார்" என்று பேட்டியளித்துள்ளார்.