வேங்கைவயல்: சிபிஐ விசாரணைக்கு திமுக மறுப்பது ஏன்?

74பார்த்தது
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - வானதி சீனிவாசன் அண்மையில் அண்ணாமலை பெயரை தவிர்த்து ட்வீட் செய்தது குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட பா.ஜனதா அனைத்து தலைவர்களும், சகோதரர், சகோதரியாக ஒரே குடும்பமாக இருக்கிறோம். நாங்கள் அனைவரும் பா.ஜனதாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒருமித்த கருத்தோடு செயல்படுகிறோம். 

சி.பி.ஐ. விசாரணை தி.மு.க. நடத்தும் நாடகமாக வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை கொடுத்துள்ள அறிக்கை 900 நாட்களைக் கடந்து செல்கிறது. கருணாநிதி எழுதும் கதை திரைக்கதை வசனத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது. தி.மு.க. நாடக கம்பெனி ஆடியோ, வீடியோ என புதிதாக சொல்கிறார்கள். தி.மு.க. ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு மறுக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை, பேசினாலே போதும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். அந்த அதிகாரம் அவருக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி