உடுமலை: ராணுவ பயிற்சி பள்ளியில் சேர கால அவகாசம்!

55பார்த்தது
உடுமலை அடுத்த அமராவதி நகரில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற சைனிக் பள்ளி உள்ளது. பள்ளியில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளின் நுழைவுத் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 24 ம் தேதி தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் https: //exams. nta. ac. in/AISSEE/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த 13 ம் தேதி மாலை 5 மணி வரை காலக்கெடு என்றும்,
6-ம் வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் (ஆண்/ பெண்) 31. 03. 2025 அன்று 10 முதல் 12 வயதிற்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் (ஆண்/ பெண்) 31. 03. 2025 அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் சேர்க்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விண்ணப்பங்கள் அளிப்பதற்கு 13-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் தற்போது 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி