இந்தியாவில் ஒரே மாதத்தஇல் 84 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை, அந்நிறுவனம் முடக்கியுள்ளது. மோசடி, சந்தேகமான செயல்பாடு பற்றி புகார் வந்ததை அடுத்து பல கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயனர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. சட்டத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்கு வாட்ஸ்அப்பை பயன்படுத்தினால் உங்களது கணக்கும் முடக்கப்படலாம்.