நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது குடும்பத்துடன் காரில் ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அவினாசி-சேவூர் ரோடு சந்திப்பில் சிக்னலுக்காக காத்திருந்தார். சிக்னல் முடிந்தும் கார் எடுக்க காலதாமதம் ஆனதால் பின்னால் இருந்த வாகன ஓட்டிகள் பலமாக ஹாரன் அடித்ததால் பதற்றமடைந்த கண்ணன் காரின் ஆக்சிலேட்டரை அதிகமாக அழுத்தினால் கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் இருந்த பூக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.