சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் எனவும் ஒரு முறைக்கு 2 நிமிடங்கள் மட்டுமே செல்ல கால அவகாசம் தரப்படும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறைகளில் கேமராக்கள் ஊழியர்களை எப்பொழுதும் கண்காணிக்கும் என்றும், விதிகளை மீறினால் 100 யுவான் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விதி மார்ச் 1ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.