பெருமாநல்லூர்: பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

85பார்த்தது
பெருமாநல்லூர்: பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பெருமாநல்லூர் அருகே பட்டாம்பாளையம் ஊராட்சி ஏ. டி. காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு மக்கள் பயன்பாட்டுக்கு பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் புதர் மண்டி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் கழிப்பிடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி