திருப்பூர்: செம்பு கம்பி திருட்டு.. டிரைவர் உள்பட 5 பேர் கைது

79பார்த்தது
ஆட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். அனுப்பர்பாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கட்டிட மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். தற்போது பெருமாநல்லூர் அவினாசி ரோட்டில் அருகே உள்ள பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் நிறுவனத்தில் இருந்து செம்பு கம்பிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பெருமாநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஆதியூர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த 5 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சித்தனர். 

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பட்டுராஜா (வயது 31), ரவிச்சந்திரன் (40), விக்னேஷ் (29), அரவிந்த் (29), சுப்பிரமணி (36) என்பதும் கட்டுமான நிறுவனத்தில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதில் பட்டுராஜா என்பவர் ஏற்கனவே அந்த நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்தவர் என்பதும், தற்போது அவரது நண்பர்கள் 4 பேரையும் வரவழைத்து திருட்டில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி